For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காலாவதியாக 8 நாட்கள் இருந்த கோதுமை மாவை அனுப்பிய Zepto -  வாடிக்கையாளர் செய்த பதிலடி!

11:58 AM May 21, 2024 IST | Web Editor
காலாவதியாக 8 நாட்கள் இருந்த கோதுமை மாவை அனுப்பிய zepto    வாடிக்கையாளர் செய்த பதிலடி
Advertisement

ஜெப்டோ நிறுவனம் காலாவதியாக 8 நாட்கள் இருந்த கோதுமை மாவை வழங்கியதை தொடர்ந்து,  வாடிக்கையாளர் ஒருவர் அதில் 7 கிலோ கோதுமையை அந் நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு அனுப்பினார். 

Advertisement

டெல்லியைச் சேர்ந்தவர் கஜேந்தர் யாதவ்.  இவர் சமீபத்தில் ஜெப்டோ நிறுவனத்தில் ஆர்டர் செய்து 10 கிலோ கோதுமை மாவை வாங்கியுள்ளார்.  கோதுமை மாவின் காலாவதி தேதியை பார்த்த போது அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.  ஏனெனில் அவை காலாவதியாக இன்னும் 8 நாட்களே இருந்துள்ளது.  8 நாட்களுக்குள் 10 கிலோ கோதுமை மாவை எவ்வாறு முடிப்பது என்று குழம்பியுள்ளார்.  பின்னர் இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஜெப்டோ,  நான் ஜெப்டோவிடம் இருந்து 10 கிலோ கோதுமையை ஆர்டர் செய்தேன்.  அவை இன்னும் 8 நாட்களில் காலாவதி ஆக உள்ளது.  10 கிலோ கோதுமையை வெறும் 8 நாட்களில் எப்படி முடிப்பேன்? இங்கே வாருங்கள், ஜெப்டோ அதனை ஒன்றாக சேர்ந்து முடிப்போம்,” என்று கஜேந்தர் யாதவ் ஒரு புகைப்படத்தை  இணைத்து எழுதினார்.

இதற்கு  ஜெப்டோ நிறுவனம் ஆர்டர் விவரங்களைப் பகிரும்படி அவரிடம் கேட்டது.  மேலும் இதற்காக வருத்தத்தையும் தெரிவித்தது.  அந்த நிறுவனம் விரைவில் அவரைத் தொடர்பு கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தது.  ஆனால் யாதவுக்கு வாடிக்கையாளர் சேவையிலிருந்து அழைப்பு வந்ததால் நிலைமை மோசமானது.

யாதவிடம் பேசிய பெண்மணி அவரிடம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் 7 நாட்களில் கோதுமை பாக்கெட்டை முடிக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.  தொடர்ந்து அந்த பெண்மணி "3 அல்லது 4 பேர் கொண்ட குடும்பம் ஒரு வாரத்தில் 10 கிலோ மாவு சாப்பிடுவது சாத்தியம்?  நீங்கள் சாப்பிட வழியில்லை, இல்லையா?" என்று கேட்டுள்ளார்.

இதனையடுத்து யாதவ் தனது எக்ஸ் தள பக்கத்தில்  “அன்புள்ள ஆதித் பலிச்சா,  கைவல்யா வோஹ்ரா,  உங்கள் வாடிக்கையாளர் சேவைக்கு பொது அறிவு குறித்த சில பயிற்சி கொடுக்க வேண்டும்.  காலாவதியாகும் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் உங்கள் வணிகத்தை நடத்தினால்,  குறைந்தபட்சம் உங்கள் ஆப்ஸில் காலாவதி தேதியைக் காட்டுங்கள்.

காலாவதியாக இருக்கும் ஒரு பொருளை விற்பதில் எந்தப் பயனும் இல்லை.  காலாவதி தயாரிப்புகள் பல்வேறு தளங்களில் தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  நாங்கள் மாவுக்கான முழு விலையையும் செலுத்தி,  கிட்டத்தட்ட காலாவதியான பொருளைப் பெற்றுள்ளோம்." என்றார்.

பின்னர் அடுத்த பதிவில்,  நிறுவனர்களை மீண்டும் டேக் செய்து, அதை வீணாக்க விரும்பவில்லை என கூறி 7 கிலோ கோதுமை மாவை திருப்பி அனுப்புவதற்காக,  அவர்களின் அலுவலக முகவரியைப் பகிரும்படி கேட்டார்.  பின்னர்,  யாதவ் நிறுவனத்தின் முகவரியைப் பெற்றதாகவும்,  நிறுவனத்தின் ஒவ்வொரு நிறுவனருக்கும் 3 கிலோ மாவு அனுப்பியதாகவும் பகிர்ந்து கொண்டார்.

ஜெப்டோ நிறுவனம் பணத்தைத் திரும்பி அளிப்பதற்காக அழைத்த போதிலும், யாதவ் மறுத்துவிட்டார்,  "இது இப்போது பணத்தைத் திரும்பப் பெறுவது பற்றியது அல்ல.  இது துன்புறுத்தல்,  நேரம் மற்றும் ஆற்றல் இழப்பு பற்றியது" என்றார்.   இந்த சம்பவத்திற்கு பிறகு,  அவர் வாங்கும் ஒவ்வொரு பொருளின் காலாவதி தேதியையும் சரிபார்த்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement