"கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு" - ஆர்.பி.உதயகுமார்!
மதுரையில் எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொது, "இந்தியத் தேசத்தின் பெண்கள் உலக கோப்பையைக் கைகளில் உயர்த்திப் பிடித்திருப்பதைக் காண கண்கள் கோடி வேண்டும். அற்புதச் சாதனை. பாரத தேசத்திற்கு மகுடம் சூட்டிய நம் தேசத்தின் மகள்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த மகிழ்ச்சியான தரணத்தில் நம்முடைய தலையில் இடி இறங்கியதைப் போல ஒரு பேரதிர்ச்சி.
மாணவியைக் கடத்திக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்க்குலைந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? என்று கேட்கும் அளவில் தான் இந்த நிலைமை அமைந்திருக்கிறது. இதுகுறித்து கொஞ்சமும் ஆட்சியாளர்கள் கவலை கொண்டதாக தெரியவில்லை. இந்த வேதனையான துயரச் சம்பவம் நம் நெஞ்சை பதபதைக்க வைக்கின்றது. இந்த தொடர் துயரச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதற்கு முடிவரை எழுதிட, புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் மக்களாட்சி மலரச் செய்துட உறுதி ஏற்று உடனே களத்திற்கு செல்வோம் வெற்றிவாகை சூடுவோம் என்று தெரிவித்துள்ளார்.