தொகுதி பங்கீட்டில் முதலமைச்சர் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்! - மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது நம்பிக்கை
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களை ஏமாற்ற மாட்டார் என்று மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் நேற்று மனிதநேய
மக்கள் கட்சியின் "வெல்லட்டும் இந்தியா" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மமக பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது பங்கேற்றார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அப்துல் சமது, “மனிதநேய மக்கள் கட்சிக்கு நாடாளுமன்ற தொகுதி இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடம் எழுந்துள்ளது. 2014-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.இதையும் படியுங்கள் : தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி போட்டி? - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்!
தற்போது 2024 தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ‘இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்’ என முன்களப் பணியாளர்களாக, எல்லா தியாகத்திற்கும் தயாரான ஒரு இளைஞர் பட்டாளத்தை நிச்சயமாக முதலமைச்சர் ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையோடு, ‘இந்தியா கூட்டணி வெல்லட்டும், வெல்லட்டும் இந்தியா’ என்ற தலைப்பின்கீழ் பொதுக்கூட்டங்களின் வாயிலாக மக்களை சந்தித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.