"மத்திய அரசு மாற்றான் தாய் மனபாண்மையோடு தமிழகத்தை அனுகக்கூடாது" - அப்பாவு பேட்டி!
திருநெல்வேலி சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழக முதல்வர் 831 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க திட்டம் உருவாக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. குட்டம் முதல் ராதபுரம் வரையில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கு தண்ணீர் கொடுக்கும் திட்டம் ஒரு மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் சலுகை கிடைத்துள்ளது. இதனால் மக்கள் சேமிப்பு உருவாகும் என பிரதமர் சொல்லியுள்ளார். இத்தனை ஆண்டுகள் சேமித்த 20 லட்சம் கோடியை எங்கு வைத்துள்ளார்.
விஜய் தமிழக அரசை விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு, "நடிகர் கட்சி தொடங்கியுள்ளார். சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். விஜய்க்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. பாரத பிரதமர் மற்றும் முதல்வர் பற்றி பேசும்போது கண்ணியம் குறையாமல் பேச வேண்டும். வார்த்தைகள் பயன்படுத்துவதை கவனமாக இருக்க வேண்டும். மத்திய அரசே சிலரை கட்சி தொடங்கி ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பின்புலத்தில் அமித்ஷா, பாஜக இருக்கும் தைரியத்தில் விஜய் அகந்தையோடு பேசுகிறார். முதல்வரை மிரட்டும் தோனியில் பேசும்போதில் இருந்தே பாஜக தான் விஜயை இயக்குவது தெரிகிறது.
பிரதமருக்கு இருக்கும் புரோட்டோகால் வேறு விஜய்க்கான புரோட்டோக்கால் வேறு. முதல்வரை பிரதமரை பேசும்போது கன்னியத்துடன் கவனத்துடன் பேசவேண்டும். மத்திய அரசு கொடுக்கும் நிதியை கொடுக்கவேண்டும். மாற்றான் தாய் மனபாண்மையோடு தமிழகத்தை அனுகக்கூடாது. ஆளுனர் எதனையும் தெரியாமல் எழுதி கொடுப்பதை பேசுகிறார்.
தமிழக வெற்றி கழகத்தைக் கண்டு ஆளுங்கட்சி பயப்படுகிறதா என்ற கேள்வி, பயப்படுபவர்களுக்கு தான் பயம் வரவேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. பாமக கட்சியில் உள்ள விவகாரம் குறித்தும் எம்எல்ஏ குறித்தும் கேட்ட கேள்விக்கு, சட்டமன்றம் கூடும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.