For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

யாருக்கு எந்த நேரத்தில் விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தெரியும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

02:05 PM Jan 27, 2024 IST | Web Editor
யாருக்கு எந்த நேரத்தில் விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தெரியும்   மத்திய அமைச்சர் எல் முருகன் பேட்டி
Advertisement

யாருக்கு எந்த நேரத்தில் விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும். விஜயகாந்த்தின் சேவையை கருத்தில் கொண்டு தற்போது அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

“தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 31 நாட்கள் நிறைவு பெறுகிறது. அவர் ஒரு தலைசிறந்த சமூக சேவகர். ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்க்கு பிறகு கருப்பு எம்ஜிஆர் என புகழ் பெற்றவர் விஜயகாந்த் தான். தமிழ் சினிமாவில் இவர் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து வந்தார். தேசத்தின் மீது அதிக பற்று உள்ளவர். அவர் தன்னை தேசத்திற்காக அர்ப்பணித்தவர்.

அவர் சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது. அவருடைய புகழ் பொதுமக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். விருது என்பது யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்துதான் மத்திய அரசு விஜயகாந்த்திற்கு விருது கொடுத்துள்ளது. விஜயகாந்த் ஒரு சமூக சேவகனாக செயல்பட்டதால் தான் அவருக்கு அந்தப் பாராட்டு விருது கொடுக்கப்பட்டது.

யாருக்கு எந்த நேரத்தில் விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சரியாகத் தெரியும். அவருடைய சேவையை கருத்தில் கொண்டு தான் தற்போது அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசினார்.

Tags :
Advertisement