For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது" - செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு!

இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
04:18 PM Mar 19, 2025 IST | Web Editor
 இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது    செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு
Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"நாட்டில் இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏறத்தாழ 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக ராகுல்காந்தி பதிவு செய்தார். வினாத்தாள் கசிவிற்கு பிறகு, தற்போது உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்ததிருந்த போதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரயில்வே துறை.

எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது மத்திய ரயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருகின்ற மனவுளைச்சலுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement