Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

06:57 AM Nov 25, 2024 IST | Web Editor
Advertisement

40% குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவர்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-இன்கீழ் வெளியிடப்பட்ட இந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது,

“40% குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற அவர்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிவது அவசியமானது. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் பிரத்யேகமாக குழு அமைத்து, கண்டறியப்பட்ட பணிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்தக் குழுவில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு கண்டறியப்பட்ட பணிகள் குறித்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்ய வேண்டும். தொழில்நுட்ப மேம்பாடு மம் பணிகளுக்கான தேவைகளை அறிந்துகொள்ளும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பார்வையற்றோர், செவித்திறன் அற்றோர், அறிவுசார் குறைபாடுகள் போன்ற பிரிவுகளில் உள்ளோருக்கு நேரடி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வில் 4% இடஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பின்னடைவு காலியிடங்களை சரியான நேரத்தில் நிரப்புதல் மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகளில் இருந்து விலக்கு பெறுவதற்கான 3 ஆண்டு கால அவகாசம் முறையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதுதொடா்பாக கடந்த 2021 மற்றும் 2022-இல் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கு விலக்களிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags :
Central governmentDisabilityguidelinesJobsNews7TamilReservation
Advertisement
Next Article