For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வரி பகிர்வில் தென்மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டும் மத்திய அரசு | திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு

10:49 AM Feb 08, 2024 IST | Web Editor
வரி பகிர்வில் தென்மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டும் மத்திய அரசு   திமுக எம் பி  வில்சன் குற்றச்சாட்டு
Advertisement

ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரி வருவாயின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சகம் தென் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக  திமுக எம்.பி. வில்சன் குற்றம்சாட்டியுள்ளார். 

Advertisement

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வசூலிக்கப்படும் தொகை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல்லை என்று தெளிவாகிறது.  பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட மற்ற மாநிலங்களை விட தென்மாநிலங்கள் குறைவாகவே பெறுகின்றன.  அதாவது, ஜி.எஸ்.டி. வரி வருவாயில் தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும்,  மற்ற மாநிலங்களை விட குறைவான வருமானத்தையே தென்மாநிலங்கள் பெறுகின்றன.

1) தமிழ்நாடு,  ஆந்திரப் பிரதேசம்,  தெலங்கானா,  கேரளா,  கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பங்களித்த மொத்த வரி (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டி நீங்கலாக) - ரூ.22,26,983.39 கோடி,  கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தால் பங்களிக்கப்பட்ட தொகை Rs.3,41,817.60 கோடி

2) கடந்த 5 ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் (ஒட்டுமொத்தமாக) - ரூ.6,42,295.05 கோடி.  உத்தரப்பிரதேசத்திற்கு விடுவிக்கப்பட்ட தொகை - ரூ.6,91,375.12 கோடி

நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிஅளித்த பதில்: 

(a) கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பெறப்பட்ட ஜிஎஸ்டி, நேரடி, மறைமுக மற்றும் பிற வரி பங்களிப்புகளின் விவரங்கள்

(b) கடந்த ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட மத்திய வரிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்கள்

(c) பல்வேறு மாநிலங்கள் கேட்டுக் கொண்டுள்ளபடி, வரி ஒதுக்கீட்டு முறையை மாற்றுவதற்கான யோசனை ஏதேனும் அமைச்சகத்தால் பரிசீலிக்கப்படுகிறதா?

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கிய ஒவ்வொரு ரூபாயின் அடிப்படையில் மத்திய அரசு திருப்பித் அளித்த தொகை பின்வருமாறு;

தமிழ்நாடு - 26 பைசா

கர்நாடகா - 16 பைசா

தெலங்கானா - 40 பைசா

கேரளா - 62 பைசா

மத்தியப் பிரதேசம் - 1 ரூபாய் 70 பைசா

உத்தரப் பிரதேசம் - 2 ரூபாய் 2 பைசா

ராஜஸ்தான் - 1 ரூபாய் 14 பைசா

Advertisement