”தெருநாய்களை காப்பகத்திற்கு மாற்றும் உத்தரவுக்கு எதிரான வழக்கு”- தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!
நாடு முழுவதும் தெருநாய் கடி சம்பவங்கள் ஏற்பட்டு ரேபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்திற்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவிற்கு எதிரான இடைக்கால தடை கோரிய மனுக்கள் மீதான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது டெல்லி அரசு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”தெரு நாய் கடியால் குழந்தைகள் உயிர் இழக்கின்றனர். ஒரு நாளில் பத்தாயிரம் பேர் நாய் கடிக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் ஒருப் வருடத்தில் இருபதாயிரம் வரையிலான தெரு நாய் கடி உயிரிழப்புகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு விலங்குகளை வெறுப்பவர்களோ நாய்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறபவர்களோ யாரும் இல்லை. ஆனால் அவை மனிதர்களிடமிருந்து விலக்கப்பட வேண்டும்” என்று வாத்திட்டார்.
இதை தொடர்ந்து நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரானவர்கள் தரப்பு வழக்கறிஞரான கபில் சிபல், “நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படாமல் உரிய விசாரணை நடத்தப்படாமல் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. இந்த உத்தரவினால் தெருநாய்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இந்த என்ன மாதிரியான காப்பகங்களளில் அடைக்கப்படுகின்றன ?, ந்த காப்பகங்களில் எவ்வளவு நாய்கள் வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான விவகாரம் முடிவு செய்யப்பட வேண்டி உள்ளது. தெரு நாய்கள் விவகாரத்தில் உரிய சட்டம் உள்ளது. ஆகவே அழைத்துச் செல்லப்பட்ட நாய்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும்” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டரிந்த் நீதிபதிகள், டெல்லி அரசின் செயலற்றதன்மையால் தான் இந்த நிலை உருவாகியுள்ளது. தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்கனவே விதிமுறைகளும் சட்டங்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது ஆனால் அவை எதுவும் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. ஒரு பக்கம் மனிதர்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இன்னொரு பக்கம் விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரு நாய்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.