For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பொங்கலன்று வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்” - சீமான் பேட்டி!

பொங்கலன்று ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
01:52 PM Jan 12, 2025 IST | Web Editor
“பொங்கலன்று வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்”   சீமான் பேட்டி
Advertisement

சென்னையில் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

Advertisement

"பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய இன உரிமையை மீட்டு அவற்றை பாதுகாத்து வருங்கால தலைமுறைக்கு ஆறு, கடல், காடு உள்ளிட்ட வளங்களை பாதுக்காக்க உறுதியேற்றுக்கும் நாளாக இருக்க வேண்டும். உழவுக்கும் தனக்கும் உறவாக நின்ற மாடுகளுக்கு பண்டிகை வைத்து கொண்டாடிய மரபு தமிழர் மரபு.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக நிற்கும். தேர்தல் வாக்கு நிறைவு பெற்ற உடனே அங்கீகாரக் கடிதம் கொடுத்தார்கள். விடுதலை சிறுத்தை கட்சிக்கும், எங்களுக்கும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே ஆறு தேர்தலாக நின்ற சின்னம் தான் விவசாயி. தனி மரம் தோப்பாகாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தனித்தனி மரம் தான் தோப்பாகும். நாங்கள் தனித்த மரம் கிடையாது பெருத்த மரம், பேரினத்தின் மரம்!

பொங்கலன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். பொங்கலன்று யுஜிசி தேர்வை நடத்தும் மத்திய அரசு வட இந்திய பண்டிகைகளின்போது தேர்வு நடத்துமா? தமிழ்நாட்டில் கேட்க ஆளில்லாததால் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது.

திமுகவுக்கு வாக்கு செலுத்தி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள். பார்ப்பனர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு அவர்களுடன் கூட்டு வைத்தது யார்? வள்ளலார், வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்? பெரியார் தான் சமூகநீதியை நிலைநாட்டினார் என்றால் 10.5% இடஒதுக்கீடு கேட்டு பாமக ஏன் போராடுகிறது?

ஆதாரத்தை பூட்டி வைத்துக்கொண்டு ஆதாரத்தை தா என்றால் எங்கே போவது? பெரியாரை பற்றி பேசி தேர்தலில் ஓட்டு கேட்க எந்த கட்சியாவது தயாரா? எங்களுக்கு பல்லாயிரம் கணக்கான முன்னவர்கள் உள்ளனர். மண்ணுக்கும், மக்களுக்கும், நல்வாழ்வுக்கு பாடுபட்ட மக்கள் இருக்கிறார்கள். அந்த அடையாளங்களை ஒற்றை முகத்தை வைத்து மூடி மறைக்க பார்க்கிறீர்கள்.

பெண்ணிய உரிமை, மொழி மீட்பு, சாதி ஒழிப்பு, சமூக நீதி எல்லாவற்றிற்கும் ஆன  ஒரே தலைவர் பிரபாகரன். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நாங்களும் தொடர்ந்து போராடுவோம், இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடிவரும் அதிமுகவிற்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement