"பாஜக கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு !
பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
06:46 AM Mar 23, 2025 IST
|
Web Editor
Advertisement
அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
Advertisement
"மீண்டும் ஒருமுறை தென்னகத்திலிருந்து இந்திய ஒன்றியத்திற்கான குரல் ஒலித்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர்களை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு அழைத்து, மக்கள் தொகை அடிப்படையிலான மக்களைவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் போன்ற முக்கியத் தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனி மத்திய பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article