For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலாற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் - அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!

06:49 AM Feb 27, 2024 IST | Web Editor
பாலாற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும்    அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
Advertisement

பாலாற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் என அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் என விவசாயிகளால் அழைக்கப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

ஆந்திர மாநிலம் குப்பத்துக்கு அருகிலுள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே  தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு  திட்டமிட்டுள்ளதற்கு தமிழ்நாட்டிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.  தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகியவை பாலாறினால் பயன்பெறுகின்றன.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார்.

இதற்கிடையே, பாலாற்று பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஏற்கெனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழ்நாட்டின் பாலாறு வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய தடுப்பணை பணிக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags :
Advertisement