Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இரட்டை இலை சின்னம், கொடி: ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்!

01:15 PM Mar 25, 2024 IST | Web Editor
Advertisement

அதிமுகவின் பெயர்,  கொடி,  சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

Advertisement

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர்,  கொடி,  சின்னம்,  லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி,  அதிமுகவின் பெயர்,  கொடி,  சின்னம்,  லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்ரது.  அப்போது அதிமுகவின் பெயர்,  கொடி,  சின்னம்,  லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை விலக்க நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சக்திவேல் அடங்கிய அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.  மேலும் ஓ.பி.எஸ்ஸின் இந்த மேல்முறையீட்டு மனு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.  மேலும், இந்த மனு மீதான இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Tags :
ADMKAIADMKchennai High Courtedappadi palaniswamiElection2024EPSflagMadras High CourtOPanneerselvamOPS
Advertisement
Next Article