Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...!

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
02:58 PM Oct 27, 2025 IST | Web Editor
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

”மண்டல் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 16(4), 340 ஆகியவற்றின்படி, 1993-ஆம் ஆண்டு முதல் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவது தான் இந்த ஆணையங்களின் கடமையாகும். தமிழ்நாட்டில் நீதியரசர் தணிகாசலம் தலைமையிலான ஆணையம் பதவி விலகியதையடுத்து, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வீ.பாரதிதாசன் தலைமையில் புதிய ஆணையம் 17.11.2022-ஆம் நாள் அமைக்கப்பட்டது. ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரிகள் நால்வர் உள்ளிட்ட 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆணையத்திற்கு மொத்தம் 6 பணி வரம்புகளும், ஒரு கூடுதல் பணி வரம்பும் வழங்கப்பட்டன.

ஆனால் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கடந்த மூன்றாண்டு கால செயல்பாடுகளை ஆய்வு செய்தால், சொல்லிக்கொள்ளும்படியாக எதையும் செய்யவில்லை. இன்னும் கேட்டால் ஆணையம் செயல்படவே இல்லை. ஆணையத்தின் இப்போதைய தலைமை, இந்தப் பணியை பகுதி நேர பொழுதுபோக்காகவே கருதுகிறது. சமூகநீதி தேவைப்படும் மக்களை திருப்திபடுத்துவதற்கு பதிலாக ஆட்சியாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதையே ஆணையம் செய்தது. இந்தத் தலைமையோ, உறுப்பினர்களோ இருந்தால் தமிழ்நாட்டில் சமூகநீதி மீண்டும் மீண்டும் சிலுவையில் அறையப்படுமே தவிர, எந்த சமூகத்திற்கும் சமூகநீதி கிடைக்காது. மிகவும் வருத்தத்துடனும், வேதனையுடனும் இந்த குற்றச்சாட்டை பதிவு செய்கிறேன்.

தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 16-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய ஆணையத்தை அமைக்கும் போது, அதில், கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகநீதியை படுகொலை செய்வதர்களுக்கு இடமளிக்கக்கூடாது. மாறாக, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து தான் புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AnbumaniRamadossCMStalinlatestNewsPMKTNBCC
Advertisement
Next Article