For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டிருப்பது ராமரின் சிலை மட்டுமல்ல, இந்தியாவின் பண்பாடு!” - பிரதமர் மோடி

04:08 PM Jan 22, 2024 IST | Web Editor
“அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டிருப்பது ராமரின் சிலை மட்டுமல்ல  இந்தியாவின் பண்பாடு ”   பிரதமர் மோடி
Advertisement

அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டிருப்பது ராமரின் சிலை மட்டுமல்ல, இந்திய நாட்டின் பண்பாடு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

Advertisement

அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:

பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது.  கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது.  இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார்.  இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது.  1000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.  கால சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம்.  கோயில் கட்டுவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு ராமரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.  அடிமைத்தனத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம். ராமர் கோயிலுக்கான நூற்றாண்டு போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.  ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சட்டப்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார்.  ஒட்டுமொத்த தேசமே ராமர்கோயில் திறப்பை தீபாவளி போன்று இன்று கொண்டாடுகிறது.

ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் காலச்சக்கரம் மாறுவதை உணர்ந்தேன்.  ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது.  ராமர் கோயிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு இருகரம்கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags :
Advertisement