For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மத்தியில் அட்சி அமைந்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து" - ராகுல் காந்தி உத்தரவாதம்!

12:16 PM Apr 16, 2024 IST | Web Editor
 மத்தியில் அட்சி அமைந்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து     ராகுல் காந்தி உத்தரவாதம்
Advertisement
மத்தியில் அட்சி அமைந்தவுடன்,  அக்னிபாத் திட்டம் ரத்து செய்துவிட்டு,  ராணுவத்தில் பழைய நிரந்தர ஆள்சேர்ப்பு நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவோம் என காங்கிரஸ் முத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர்,  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது.  முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில்,  தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால்,  அப் பகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “எங்களை பயன்படுத்தி ராகுல் அண்ணா மீது அவதூறு பரப்புவதா?” – வில்லேஜ் குக்கிங் சேனல் சார்பில் விளக்கம்.. நடந்தது என்ன?
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அக்னிபாத் திட்டம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது :
"அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தையும்,  நாட்டைக் காக்க வேண்டும் என்று கனவு காணும் துணிச்சலான இளைஞர்களையும் அவமதிக்கும் செயலாகும்.  இது இந்திய ராணுவத்தின் திட்டம் அல்ல. நரேந்திர மோடியின் அலுவலகத்தில் செய்யப்பட்ட திட்டம். ராணுவத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது.  தியாகிகளை வித்தியாசமாக நடத்த முடியாது, நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்யும் ஒவ்வொரு நபரும் தியாகி அந்தஸ்தைப் பெற வேண்டும்.  இந்திய அரசு அமைந்தவுடன், இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, பழைய நிரந்தர ஆள்சேர்ப்பு நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவோம்"
இவ்வாறு காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?

உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.  இந்திய ராணுவத்தில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.  இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்பவர்கள் 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம்.  அதற்கு முன்னர் சுமார் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.  இந்த நான்கு ஆண்டுகள் சேவை முடிந்த பின்னர் இவர்களில் 25% பேர் மட்டும் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டு,  மீதமுள்ள 75% பேர் வெளியேற்றப்படுவார்கள்.  இந்த திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.

இது இந்தி திட்டத்தின் மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அ திகபட்ச உயிர் தியாகத்தை கோரும் இந்த பணியில் ஓய்வூதியம் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த திட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டம் வெடித்தது.  இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

Tags :
Advertisement