For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளை வெளியாகிறது ‘தங்கலான்’ திரைப்படத்தின் 3-ஆவது பாடல்!

09:04 PM Aug 11, 2024 IST | Web Editor
நாளை வெளியாகிறது ‘தங்கலான்’ திரைப்படத்தின் 3 ஆவது பாடல்
Advertisement

விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் 3-ஆவது பாடலான 'அறுவடை' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை. இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக, இப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.  இந்த நிலையில்,  'தங்கலான்' திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் 3-ஆவது பாடலான 'அறுவடை' பாடல் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement