”2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி ஆட்சிக்கான களமே”- கிருஷ்ணசாமி பேட்டி..!
தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, மக்கள் சந்திப்பு பயணம் என தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தனியார் உணவகத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி ஆட்சிக்கான களம் தான். தமிழ்நாட்டில் 2026-ல் தனத்து எந்தக்கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது. தமிழ்நாட்டு மக்களே ஒற்றை கட்சி ஆட்சி முறைக்கு முடிவகட்ட விரும்புகிறார்கள்.
மிதமிஞ்சிய ஊழல், கனிமவளக் கொள்ளை, அரசு சொத்துகளை அபகரிப்பது போன்றவற்றிற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்றால் கூட்டணி ஆட்சிதான் ஒரே தீர்வு.
திறந்த புத்தமாக உள்ளோம். எங்களது கட்சியின் 2026 ஜனவரி 7-ம் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகுதான் யாருடன் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்வோம். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு இருந்தால் மட்டுமே அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளை குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் ”என்றார்.