For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெகுவிமரிசையாக நடைபெற்ற பொத்தகாலன்விளை திருக்கல்யாண மாதா திருத்தல 111-வது ஆண்டு தேரோட்ட திருவிழா!

07:41 AM Jan 23, 2024 IST | Web Editor
வெகுவிமரிசையாக நடைபெற்ற பொத்தகாலன்விளை திருக்கல்யாண மாதா திருத்தல 111 வது ஆண்டு தேரோட்ட திருவிழா
Advertisement

சாத்தான்குளம் அருகே உலக பிரசித்தி பெற்ற திருக்கல்யாண மாதா திருத்தல 111-வது
ஆண்டு தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை திருக்கல்யாண
மாதா திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் இத்திருக்கல்யாணமாதா காட்சியளிக்கிறார்கள்.ஒன்று பாண்டிச்சேரி மற்றொன்று சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை திருக்கல்யாணமாதா திருத்தலமாகும். இத்திருத்ததல தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு 111-வது ஆண்டு தேரோட்டத் திருவிழா கடந்த 14ஆம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 7.30 மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

9-ஆம் நாளான நேற்று 7 மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலை 6
மணிக்கு திருக்கல்யாண மாதா தேரில் எழுந்தருளி ரதவீதியில் உலா வந்து
பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து, மாலை ஆராதனை தூத்துக்குடி
மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் தலைமையில் நடைபெற்றது. 10ம் திருவிழாவான இன்று காலை முன்னாள் ஆயர் இவோன் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இந்த
விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
Advertisement