தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து
நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், மேலும் சில தலைவர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
"இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்"
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
"தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்"
நடிகர் சிபி சத்யராஜ்
"நடிகர் விஜய்க்கு அன்பு, நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் போல உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்"