திருச்சியில் தவெக தலைவர் விஜய் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
10:24 AM Sep 13, 2025 IST | Web Editor
Advertisement
தவெக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். இன்று தொடங்கவுள்ள விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Advertisement
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் பிரசாரம் செய்யவுள்ளார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் தவெக தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார்.
இந்த நிலையில் திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய்யின் பிரசார பயணத்துக்கு 25 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.