அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!
நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.
இதையும் படியுங்கள் : “சூர்ய மூர்த்தி அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல” – தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் பதில் மனு!
தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி வேலைகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி கடந்த பிப்.2ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி அன்றைய தினம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரது சிலைகளை திறந்துவைத்தார்.
நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.… pic.twitter.com/0NBxY8BsqN
— TVK Vijay (@TVKVijayHQ) February 20, 2025
இந்த நிலையில், அஞ்சலை அம்மாளின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பனையூர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.