முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதோடு முதலமைச்சர் பங்கேற்க வாழ்த்தரங்கம், கவியரங்கம் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கிய வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதன் பிறகு மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, அண்ணா ஆகியோரின் நினைவிடங்கள் மற்றும் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 1, 2025
இதற்கிடையில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.