For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பி விஜய்க்கு நன்றி" - சீமான்

09:58 AM Jun 09, 2024 IST | Web Editor
 உளமார பாராட்டி  வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பி விஜய்க்கு நன்றி    சீமான்
Advertisement

நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்க்கு, சீமான் நன்றி தெரிவித்துள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி, மாநில கட்சிகள் என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கான தகுதியை பெற்றன.  தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி 8% வாக்குகளும்,  நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளும் பெற்றன.

வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இரு கட்சிகளும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதை தேர்தல் ஆணையம் உறுதி செய்து 15 நாட்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கும் எனவும் கூறப்படுகிறது.  இதனிடையே,  இந்த இரண்டு கட்சிகளுக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி! உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி!” என தெரிவித்துள்ளார். 

Tags :
Advertisement