For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”- ராகுல் கிண்டல் பதிவு!

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
08:36 PM Aug 13, 2025 IST | Web Editor
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
”இறந்தவர்களுடன்  தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”  ராகுல் கிண்டல் பதிவு
Advertisement

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஜுன் 24 அன்று இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்கு எதிர் கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

ஆனால் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்ததை  மேற்கொண்டு கடந்த ஜீலை 30ல் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அந்த 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையமானது இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு இருந்ததை கண்டறிந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தது.

இதற்கு ,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவர்  தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் ரகோபூர் தொகுதியைச் சேர்ந்த ரமிக்பால் ரே, ஹரேந்திர ரே, லால்முனி தேவி, வச்சியா தேவி, லால்வதி தேவி, பூனம் குமாரி, முன்னா குமார் ஆகியோரை சந்தித்தார். இவர்கள் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான ஆவணங்களை பூர்த்தி செய்து அளித்திருந்தும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனது தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி!" என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement