For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பிரதமர் பிரசாரம் செய்த எல்லா இடத்திலும் ‛இந்தியா’ கூட்டணி வெற்றி.. மோடிக்கு நன்றி” - சரத் பவார் பேட்டி!

06:57 PM Jun 15, 2024 IST | Web Editor
“பிரதமர் பிரசாரம் செய்த எல்லா இடத்திலும் ‛இந்தியா’ கூட்டணி வெற்றி   மோடிக்கு நன்றி”   சரத் பவார் பேட்டி
Advertisement

தேர்தலின் போது மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி எங்கெல்லாம் பிரசாரம் செய்தாரோ அங்கெல்லாம் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே பிரதமர் மோடிக்கு நன்றி என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக அணிக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவ சேனா (உத்தவ் தாக்கரே) அடங்கிய மகா விகாஸ் அகாதி களம் கண்டது. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 31 தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதில், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், சிவ சேனா (உத்தவ் தாக்கரே) 9 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

தேர்தல் வெற்றியை அடுத்துப் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலி, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. எனவே, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சி 150 இடங்களில் போட்டியிடும் என கூறினார்.

இது ஒருபுறம் இருக்க மகாராஷ்டிராவின் சட்ட மேலவைக்கு காலியாக உள்ள 4 இடங்களுக்கு சிவ சேனா (உத்தவ் தாக்கரே) தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தார். இதன் காரணமாக, கூட்டணி பிளவுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதையும் படியுங்கள் : மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது!

இந்நிலையில், மகா விகாஸ் அகாதி சார்பில் மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே, சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சரத் பவார், “தேர்தலின்போது மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி எங்கெல்லாம் ரோட் ஷோ நடத்தினாரோ, பொதுக்கூட்டம் நடத்தினாரோ அங்கெல்லாம் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. அதற்காக நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மோடியின் முகமுடியை கழற்றியதற்காக பல யூடியூபர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தாலி குறித்து மோடி பேசியதையெல்லாம் அபத்தத்தின் உச்சம். எங்களிடமிருந்து பிரிந்து பாஜகவில் ஐக்கியமானவர்கள் மீண்டும் கட்சியில் இணைத்துப்படக்கொள்ளமாட்டார்கள்" என்று கூறியுள்ளார். அதேபோல பிருத்விராஜ் சவான் கூறுகையில், "ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியையும் கருத்தில் கொண்டு சீட் பங்கீடு குறித்து முடிவெடுப்போம்" என கூறினார்.

Tags :
Advertisement