For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆசிரியை கொலை | "திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்" - இபிஎஸ் கண்டனம்!

02:05 PM Nov 20, 2024 IST | Web Editor
ஆசிரியை கொலை    திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்    இபிஎஸ் கண்டனம்
Advertisement

தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணமாகி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன்( 30) . இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த மதன் இன்று காலை ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்த போது, வகுப்பறையில் புகுந்து ரமணி கழுத்து பகுதியில் மதன் கத்தியால் குத்தினார். இதில் ரமணி மயங்கி விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள் : தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

இந்த நிலையில், ஆசிரியையை ரமணி குத்திக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்:

"தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். ஆசிரியர் ரமணியின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், திமுக முதலமைச்சர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/EPSTamilNadu/status/1859138808798998687

Tags :
Advertisement