For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தங்கலான்” ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்!

04:47 PM Jul 19, 2024 IST | Web Editor
“தங்கலான்” ரிலீஸ் எப்போது  வெளியானது அப்டேட்
Advertisement

விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

கடந்த ஜூலை 13-ம் தேதி ‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. தொடர்ந்து, ‘தங்கலான்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மினிக்கி மினிக்கி’ பாடல் நேற்று முன்தினம் (ஜுலை 17) வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “ஆகஸ்ட் 15-ம் தேதியன்று சம்பவம் இருக்கு” என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement