For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Thalapathy69 | "ஜனநாயகத்தின் தீபம்.." - அக். 2025-ல் வெளியாகும் ‘தளபதி 69’ திரைப்படம்!

05:20 PM Sep 14, 2024 IST | Web Editor
 thalapathy69    ஜனநாயகத்தின் தீபம்      அக்  2025 ல் வெளியாகும் ‘தளபதி 69’ திரைப்படம்
Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் தி கோட். இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

Advertisement

‘தளபதி 69’ படத்தை அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (செப். 14) மாலை 5 மணிக்கு வெளியாகும் என கே.வி.என் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி, இப்படத்திற்கான அறிவிப்பை கே.வி.என். நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “பரபரப்பான ராக்ஸ்டார் அனிருத் இசையில், தொலைநோக்கு பார்வையாளரான எச்.வினோத் இயக்கும் ‘தளபதி69’ தான் எங்களின் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். தளபதி நடிகர் விஜய்யுடன் ஒத்துழைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் அக்டோபர் 2025-ல் திரைக்கு வருகிறார்” இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement