For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தைப்பூச திருவிழா - தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம் !

தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
09:22 AM Feb 11, 2025 IST | Web Editor
தைப்பூச திருவிழா   தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம்
Advertisement

முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதியில் உள்ள முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. குறிப்பாக பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நேற்று முதலே அதிகரிக்க தொடங்கிவிட்டது.

Advertisement

தைமாதம் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று கூடும் நாளில் தைப்பூசம் திருவிழா கொண்டாப்படுகிறது. அதுவும் இந்தாண்டு முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை வருவது கூடுதல் சிறப்பு என கூறப்படுகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதியன்று பழனி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இதையடுத்து நேற்று 6ஆம் நாளில் பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருமண வைபோகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று தைப்பூச முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற் உள்ளது. தைப்பூச திருநாளையொட்டி அதிகாலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரை மேற்கொண்டும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி மலர்களால் அலங்கரித்த வள்ளி தெய்வானையுடன் தங்கமேனியில் காட்சியளிக்கும் முருக பெருமானை தரிசனம் செய்தனர். ஆலயம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர்
உட்கோட்ட காவல்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

ஈரோடு :

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர் திருவிழா களைகட்டியது. இந்த நிலையில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு ராஜ வீதிகள் வழியாக தேர் வடம் பிடித்து கொண்டு செல்லப்பட்டது.

தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரோகரா என பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து முருகனை வழிபட்டனர். அதேபோல், பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தேர் திருவிழாவை முன்னிட்டு சென்னிமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் :

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் கோயில் நிர்வாகம் இலவச தரிசனம் மற்றும் கட்டண வழி தரிசனம் போன்றவற்றில் முன்னேற்பாடுகள் செய்யாததால் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஆறு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் மலைக்கோவில் வளாகம் மற்றும் மலை அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags :
Advertisement