For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“Terrific Look” - ‘Good Bad Ugly' படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!

06:35 AM Dec 15, 2024 IST | Web Editor
“terrific look”   ‘good bad ugly  படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
Advertisement

‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. பல்கேரியாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

https://twitter.com/gvprakash/status/1867996596040061142

இதற்கிடையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகின்றனர். நடிகர் அஜித்தும் அவ்வப்போது ஒரு சில அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ரீசண்ட் கிளிக்கை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ளார். அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரே ஃப்ரேமில் இருக்கும்படி இப்புகைப்படம் அமைந்துள்ளது. இப்புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement