ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ - 1,200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் !
ஜப்பானின் ஒபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1200 பேர் வெளியேறியுள்ளனர்.
10:14 AM Mar 05, 2025 IST | Web Editor
Advertisement
ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் சுமார் 100 வீடுகள் தீயில் சேதமடைந்தன.
Advertisement
இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அதேபோல் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 1,200 பேர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 2000 திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.