கரூர் அருகே பயங்கர விபத்து - சிறுமி உள்பட 4 பேர் உயிரிழப்பு!
தூத்துக்குடியில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு சிலர் வேனில் சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். இவர்களின் வேன் கரூர் வெண்ணெய்மலை அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் சேலத்திலிருந்து கரூர் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்த்திசையில் வந்த சுற்றுலா வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோயது.
இதையும் படியுங்கள் : Uber ஓட்டுநர் செய்த அதிர்ச்சி செயல்… மிரண்டு போன பயணிகள்.. வீடியோ வைரல்!
இந்த பயங்கர விபத்தில் 8 வயது சிறுமி, சிறுவன், சுற்றுலா வேன் ஓட்டுநர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், உயிரிழந்த நபர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சுற்றுலாவிற்கு வந்த 4 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.