For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Manipur -ல் பதற்றம் - பாதுகாப்பு படையினருடனான மோதலில் 11பேர் சுட்டுக்கொலை!

09:40 PM Nov 11, 2024 IST | Web Editor
 manipur  ல் பதற்றம்   பாதுகாப்பு படையினருடனான மோதலில் 11பேர் சுட்டுக்கொலை
Advertisement

மணிப்பூரில் பாதுகாப்பு படையுடனான மோதலில் குகி ஆயுதக் குழுவைச் சார்ந்த 11பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். மணிப்பூரில் தொடர்ந்து, டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்தன.

இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு பல இடங்களில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டதுடன்,  இணைய சேவையும் தடை செய்யப்பட்டது. இதனால் சில மாதங்களாக மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவியது. ஆனாலும் முழுமையாக மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை.

இந்த சூழலில், சமீப நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இரண்டு தினங்களுக்கு முன்பு மணிப்பூரில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் குகி இனத்தைச் சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட 11 பேரும் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் போரோபேக்ரா பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் நடத்துவது, கடைகளுக்கு தீயிட்டு எரிப்பது போன்ற நடவடிகைகளில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டதாகவும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை முகாம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் இருவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement