For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Tenkasi | குற்றாலத்தில் குளிக்க அனுமதி - அதிகாலை முதலே ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்!

07:28 AM Oct 03, 2024 IST | Web Editor
 tenkasi   குற்றாலத்தில் குளிக்க அனுமதி   அதிகாலை முதலே ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகள் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளன. இந்த அருவிகளுக்கு உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமன்றி, வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்து குளித்து மகிழ்கின்றனர். குற்றாலத்தில் பழைய குற்றாலம், பிரதான அருவி, பாலருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, செண்பகாதேவியருவி ஆகிய அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வர்.

குற்றாலத்தில் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்படும். தொடர் விடுமுறை, வார விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் களைகட்டும். பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குற்றால அருவிகளுக்கு குடும்பத்துடன் மக்கள் சுற்றுலா வருகின்றனர். தென்காசியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மழையும் அவ்வப்போது பெய்து குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது.

நேற்று முன்தினம் (அக். 1) முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர் வரத்து சீரான பின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.

அதன்படி, தற்போது ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகாலை முதலே அருவி கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement