தென்காசி: லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு...!
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளானர்.
தென்காசி மாவட்டத்தில் உலா புளியங்குடி பகுதியை சேர்ந்தவர்கள், கார் ஒன்றில் குற்றாலம் அருவிக்கு நேற்று சென்று குளித்துவிட்டு, மீண்டும் தங்களின் காரில் சொந்த ஊர் திரும்பினர். இவர்களின் கார் கடையநல்லூர், சிங்கிலிபட்டி பகுதியில் வந்துகொண்டு இருந்தது. அப்போது, காரும் - அவ்வழியே சிமெண்ட் லாரி ஏற்றி தென்காசி நோக்கி பயணித்த லாரியும் நேருக்கு நேர் மோதி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், துரிதமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையிலேயே இவர்கள் புளியங்குடியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் தென்காசிக்கு விரைந்துள்ளனர். மேற்படி விபரங்கள் காவல் துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது.