#Thamirabarani ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் மாயம்!
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமிகள் இருவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07:10 PM Jan 17, 2025 IST | Web Editor
Advertisement
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலிலுள்ள தாமிரபரணி ஆற்றுக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 15 -க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் குளிக்க சென்றனர். அவர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 6 பேரை ஆற்று நீர் இழுத்துச்சென்றனர்.
உடனடியாக அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் தீவிர முயற்சியினால் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், தூத்துக்குடியைச் சேர்ந்த வைஷ்ணவி மற்றும் மாரி அனுசியா ஆகிய இரு சிறுமிகள் நீரில் மூழ்கி மாயமாகினர்.
நீண்ட நேரமாக தேடியும் சிறுமிகள் இருவரும் கிடைக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமிகள் இருவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement