For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் - அண்ணாமலை கண்டனம்!

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் அமைத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
12:39 PM Apr 17, 2025 IST | Web Editor
கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம்   அண்ணாமலை கண்டனம்
Advertisement

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும்.

நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement