Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தெலங்கானா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திரசேகர ராவ்!

08:52 PM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, தெலங்கானா முதலமைச்சர் பதவியை சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்துள்ளார். 

Advertisement

இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்தியப் பிரதேசம்,  மிசோரம்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.   இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4 மாநில தேர்தல்  முடிவுகள் இன்று(டிச.3) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை(டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 3 மாநிலங்களில் பாஜக வெற்றியை உறுதி செய்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றியை பதிவு செய்ததை அடுத்து, அங்கு ஆட்சியில் உள்ள பி.ஆர்.எஸ் கட்சி தோல்வியை தழுவியது.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதுவரை ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டத்தில் இருந்து 2 முறை தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்த முதலமைச்சர் கே.சி.ஆர். தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி இம்முறை ஆட்சியை இழந்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா முதலமைச்சர் பதவியை சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக தெலங்கானா ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சந்திரசேகர ராவ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் வரை, பதவியில் நீடிக்கும் படி ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
BRSChandrasekaraRaoCongressElections2023governmentGovernorIndiaNews7Tamilnews7TamilUpdatesPoliticsResignationStateAssemblyStateElectionsTelanagaElectionsTelangana
Advertisement
Next Article