Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாதுகாப்பை மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த 2 பேர்! மக்களவைக்குள் புகைக்குப்பிகளை வீசியதால் பரபரப்பு!

02:02 PM Dec 13, 2023 IST | Jeni
Advertisement

பாதுகாப்பை மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த 2 பேர் புகை குப்பிகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது,  பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2 பேர்,  இருக்கைகளின் மீது ஏறி சபாநாயகர் மாடத்தை நோக்கி ஓட முயற்சித்தனர். கண்ணீர் புகை குப்பிகளை வீசினர்.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்த காவலர்கள் கைது செய்தனர்.

அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்திலும் கண்ணீர் புகை குப்பிகளை வீசிய இருவரை காவலர்கள் கைது செய்தனர்.  2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் இந்த சம்பவத்தில் கைதாகி உள்ளனர்.  இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பையும் தாண்டி உள்நுழைந்த தீவிரவாதிகள்,  தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அப்போது பாதுகாப்பு படையினரும்,  போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.  இதில் 14 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இந்த சம்பவத்தின் 22-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில்,  நாடாளுமன்றத்திற்குள் கண்ணீர் புகை குப்பிகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ArrestAttackloksabhaparliament
Advertisement
Next Article