"கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் தனி கவனம் எடுக்க வேண்டும்" - அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
கன்னியாகுமரி மாவட்டம் மாநிலக் கல்விக் கொள்கை அமல்படுத்தும் அனைத்து கல்வி பிரிவினையும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். அடைத்தேர்வு 2025 (SLAS) பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான அடைத்தேர்வு 2025 (SLAS) பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பிடித்தது பெருமையாக உள்ளது. அதற்காக உழைத்த தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த தேர்வு தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழகத்தில் நான் ஒவ்வொரு மாவட்டமாக நடத்தி வருகிறேன்.
22-வது மாவட்டமாக கன்னியாகுமரியில் ஆய்வு நடத்துகிறேன். 234 தொகுதிகளுக்கும் நேரடியாக நான் சென்று ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு அலுவலக பணியாளர்களுக்கு என்ன தேவைப்படுகிறது விவரங்களையும் கேட்டறிந்து வருகிறேன். இந்த தேர்வை தமிழக முழுவதும் 9 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. படித்தவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் பள்ளி கல்வித்துறை சார்ந்த நீதிமன்ற வழக்குகளும் அதிக அளவில் உள்ளன.
இதற்கான பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரத்தையும் காலத்தையும் அதிக அளவில் செலவிடுவதாக உள்ளது. நான் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு ஆய்வில் செல்லும்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கணித மரம் என்று அமைக்கப்பட்டுள்ளது அதில் அனைத்து கணித பார்முலா மற்றும் சூத்திரங்கள் எழுதி தொங்க விடப்பட்டுள்ள இந்த புதுமையான யோசனை குறித்து அடிக்கடி பேசுவேன். பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாம் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் தனி கவனம் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.