For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மாணவர்கள தயவு செஞ்சு விளையாடவிடுங்க..." ஆசிரியர்களுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!

12:40 PM Feb 29, 2024 IST | Web Editor
 மாணவர்கள தயவு செஞ்சு விளையாடவிடுங்க     ஆசிரியர்களுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்
Advertisement

ஆசிரியர்கள்,  தயவு செய்து விளையாட்டு நேரத்தை கடன் வாங்கி பாடம் நடத்துவதைத் தவிர்த்து விளையாடுவதற்காக நேரம் கொடுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Advertisement

கோயம்புத்தூர் கொடிசியா அரங்கத்தில்,  'நான் முதல்வன்' திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் பணி நியமன ஆணைகளைத் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை,  சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.

அப்போது விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளைச் சந்திப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தனித்தனியாக வளர்த்தெடுத்தவர் கலைஞர்.  அதிகளவில் கல்லூரிகள் திறக்கப்பட்டது கலைஞரின் ஆட்சியில் தான்.  தொழிற்சாலைகள் அதிகம் உருவானதும் கலைஞர் ஆட்சியில் தான்.  கல்விக்கு அடுத்தபடியாக திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோரை உருவாக்க முதலமைச்சர் ஸ்டாலின்,  நான் முதல்வன் திட்டத்தைத் துவக்கினார்.

இந்த திட்டத்தின்கீழ் 28 லட்சம் மாணவ,  மாணவிகள் இதுவரை பயனடைந்துள்ளனர். பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  1800 பணிநியமன ஆணைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் ஒவ்வொரு குடும்பங்களில் ஒளி ஏற்றி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  வேலைக்கு மட்டுமல்லாமல் அவர்களை அடுத்த நிலைக்கு செல்வதற்கான துருப்பு சீட்டாக இந்த திட்டம் உள்ளது.  வருமானத்திற்கு கஷ்டபட்ட குடும்பம் இன்று வருமான வரி கட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது இந்த திட்டத்தின் சாதனை.

இளைஞர்கள் வென்றால் தான் தமிழ்நாடு வெற்றி அடையும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.  பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு துறை அமைச்சராக நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நம்முடைய மாணவர்கள் விளையாட்டுத் துறையிலும் சாதனைகளை நடத்தி வருகின்றனர்.  எனவே, ஆசிரியர்கள்,  தயவு செய்து விளையாட்டு நேரத்தை கடன் வாங்கி பாடம் நடத்துவதைத் தவிர்த்து விளையாடுவதற்காக நேரம் கொடுங்கள்.”

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Tags :
Advertisement