For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 82,479 பேர் விண்ணப்பம் என பள்ளிக் கல்வித்துறை தகவல்!

09:43 AM May 27, 2024 IST | Web Editor
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு  82 479 பேர் விண்ணப்பம் என பள்ளிக் கல்வித்துறை தகவல்
Advertisement

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர்  விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

Advertisement

நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு  82 ஆயிரத்து 479 பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;

நடப்புக் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS ID உள்நுழைவின் மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மே மாதம் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறையால் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

அதனடிப்படையில், மே.25 ஆம் தேதி வரை தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் 18,920 விண்ணப்பங்கள் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கும் 9,295 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும் 5,814 விண்ணப்பங்கள் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் 1,640 விண்ணப்பங்கள் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 35,669 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 25,711 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும் 17,296 விண்ணப்பங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும் 1,186 விண்ணப்பங்கள் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் 1,452 விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் 176 விண்ணப்பங்கள் உடற்கல்வி இயக்குநர் (நிலை1) மாறுதலுக்கும் 989 விண்ணப்பங்கள் இடைநிலை மற்றும் இதர ஆசிரியர்கள் மாறுதலுக்கும் என மொத்தம் 46,810 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டு உள்ளன.

தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களிலிருந்து ஆக மொத்தம் 82,479 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டு உள்ளன. தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்து 16,183 விண்ணப்பங்கள் ஒன்றியத்திற்குள் மாறுதலுக்கும் 6,448 விண்ணப்பங்கள் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 6,185 விண்ணப்பங்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 6,853 விண்ணப்பங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கும் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்து 27,750 விண்ணப்பங்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 19,060 விண்ணப்பங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கும் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்விண்ணப்பங்கள் தொடர்புடைய அலுவலர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்ட பின்னர் பதவிவாரியாக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement