Taste Atlasன் உலகின் சிறந்த சிக்கன் ரெசிபி - தமிழ்நாட்டின் #Chicken65 -க்கு மூன்றாவது இடம்!
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65, இன்று உலகளவில் கோழிக்கறியை வறுத்து சமிகச் சிறந்த உணவுகளில் 3ஆம் இடம் பிடித்துள்ளது.
தற்போதைய பிஸியான உலகில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள இரண்டு விஷய்ங்களை தவறாமல் கடைபிடிக்கின்றனர். முதலாவது சுற்றுலா இரண்டாவது உணவு. ஆனால் இரண்டுமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததுதான். வெளியில் ஊர் சுற்றச் செல்வர்கள் தவறாமல் ருசியான உணவை உட்கொள்வது வழக்கம். அப்படி உணவகத்திற்கு செல்வோரி உணவுப் பட்டியலில் சிக்கன் இல்லாமல் எப்படி ?
சிக்கனில் எத்தனை வகையான உணவு வகைகள் வந்தாலும் சிக்கன் 65 என்றால் அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊரும் என்பதில் சந்தேகமில்லை. பிரியாணி, சப்பாத்தி, குழம்பு வகைகள் என எது சாப்பிட சென்றாலும் சிக்கன் 65 என்பது சொல்லப்படாத மெனுவாக வந்து நமது மேசையில் அமர்வது வழக்கமான ஒன்று.
ஒவ்வொரு ஆண்டும் டேஸ்ட் அட்லாஸ் உலகளவில் மக்களால் ருசித்து சாப்பிடப்படும் உணவுகளை வகைப்பிரித்து அதில் முன்னணி பட்டியலை வெளியிட்டு வருகிறது . இனிப்பு, அசைவம், பருப்புகளில் செய்யப்படும் உணவு என வகை வகையான பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் தற்போதைய புதிய வெளியீட்டில் கோழிக்கறியை வறுத்து செய்யும் மிகச் சிறந்த உணவுகளின் பட்டியலில் சிக்கன் 65 உணவு இடம்பெற்றுள்ளது.
அந்த பட்டியலில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65 மூன்றாவது இடத்தில் இடம்பிடித்திருக்கிறது. மேலும் இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே உணவு என்ற பெருமையையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சிக்கன் 65 உணவும் 1960ஆம் ஆண்டு தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் சென்னை மாநகரத்தில் புகழ்பெற்ற புஹாரி உணவகம் தான் முதன் முதலில் சிக்கன் 65 உணவை தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பட்டியலை வெளியிட்ட அட்லாஸ், சிக்கன் 65- ரெசிபி குறித்தும் அதன் பிரத்யேக தயாரிப்பு மற்றும் சுவையை புகழ்ந்து தள்ளியிருக்கிறது. மேலும் அட்லாஸின் இந்த பட்டியலில், சீனாவின் கிரிஸ்பி ஃபிரைடு சிக்கன், தைவானின் பாப்கான் சிக்கன் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.