தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! மது வாங்கி இருப்பு வைக்கும் மது அருந்துவோர்!
இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படும் நிலையில், மது பாட்டில்களை வாங்குவதில் மது அருந்துபவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வள்ளலார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் டாஸ்மாக் கடை மூடப்படுகின்றன. இந்நிலையில், 2 நாட்கள் தொடாச்சியாக மதுக் கடைகள் மூடப்படுவதால் மது அருந்துபவர்கள் இன்றே மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து, இன்று மதியம் 12 மணி அளவில் மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பே மது அருந்துபவர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் நின்று காத்து நின்றனர். சென்னையில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதியத்தில் இருந்து வழக்கமாக கூட்டத்தை விட அதிகமாக கூட்டம் அலை மோதியது. டாஸ்மாக் கடைகள் திறந்த பின் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு மது பாட்டில்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
இதையும் படியுங்கள் ; திரிணாமுல் காங்கிரஸை தொடர்ந்து ஆம் ஆத்மியும் அதிரடி அறிவிப்பு! பஞ்சாப்பில் தனித்து போட்டி என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு!
இந்நிலையில், மது அருந்துபவர்கள் நாள்தோறும் வாங்கும் மது பாட்டிலை விட அதிகளவில் வாங்கி சென்றனர். தினமும் மதுபழக்கம் உடையவர்களின் வீடுகளில் இன்றே மது பாட்டில்கள் வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். மேலும், இரவு 10 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்பதால் தேவையான அளவுக்கு மது பாட்டில்களை வாங்குவதில் மது அருந்துபவர்கள் ஆர்வம் காட்டினர்.
சென்னையை போல பிற நகரங்கள், கிராமப் புறங்களிலும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதி வருகிறது. 2 நாட்கள் மூடப்படுவதால் டாஸ்மாக் கடைகளிலும் மது பாட்டில்கள் அதிகளவு இருப்பு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.