158 ரன்கள் இலக்கு... பஞ்சாபை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்குமா பெங்களூரு?
ஐபிஎல் 2025 தொடரின் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பஞ்சாப் அணி களமிறங்கி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் பெங்களூரு அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 33 ரன்களும், ஷஷாங்க் சிங் 31 ரன்களும் அடித்தனர்.
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக க்ருணால் பாண்டியா, சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ள பெங்களூரு அணி முதலிடத்துக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது.
10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் இதில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்குச் செல்லும்.