விரைவில் தங்கலான் டிரெய்லர்.. வெளியான புதிய தகவல்!
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை. இத்திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் சென்சார் செய்யப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.