TANCET, CEETA நுழைவுத் தேர்வு | நாளை முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் எம்சிஏ 2024 நுழைவுத் தேர்வு எம்சிஏ , எம்பிஏ மற்றும் CEETA PG 2024 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ, எம்.டெக்,எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர பொது பொறியியல் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
அந்தவகையில் 2024-25- கல்வியாண்டுக்கான ‘டான்செட்’நுழைவுத் தேர்வு மார்ச் 9-ம் தேதியும், ‘சீட்டா’ நுழைவுத் தேர்வு மார்ச் 10-ம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு ம் (பிப். 12) நிறைவடைந்தது.
இந்த ஆண்டு TANCET , CEETA PG 2024 தேர்வுகளுக்கு மொத்தம் 39,301 தேர்வர்கள் 40 தேர்வு மையங்களில் 14 நகரங்களில் தமிழ்நாடு முழுவதும் தேர்வு எழுத உள்ளனர். M.E/ M.TECH./ M.Arch/ M . Plan படிப்புகளுக்கு நடத்தப்படும் CEETA - PG-24 தேர்வு மார்ச் 10ஆம் தேதி காலை நடைபெற உள்ளது இதற்கு 5,281 பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் எம்சிஏ 2024 நுழைவுத் தேர்வு எம்சிஏ , எம்பிஏ மற்றும் CEETA PG 2024 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. இதனை https://tancet.annauniv.edu/tancet என்று இணையதளத்தில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.