Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சவார்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல - சபாநாயகர் அப்பாவு!

11:22 AM Feb 12, 2024 IST | Web Editor
Advertisement

சவார்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் தமிழ்நாட்டினரும், சட்டமன்றமும் சளைத்தவர்கள் அல்ல என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தலைமைச் செயலகத்திற்கு வந்த ஆளுநர் ரவியை, பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழில் வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆனால்,  சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கமால் 2 நிமிடங்களில் புறக்கணித்தார். 

அப்போது சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்திலும்,  இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார். உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார். ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

பின்னர் உரையின் இறுதியில், “ஆளுநரை முறைப்படி அழைத்து,  தமிழ்நாடு அரசு அவருக்கு தயாரித்த உரையை அவருடைய ஒப்புதல் பெற்று அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதை குறைவாக வாசித்தார். அதை நான் குறையாக சொல்லவில்லை. பின் தேசியகீதம் பாடியிருக்க வேண்டும் என ஆளுநர் பரிந்துரைத்தார். அனைவருக்கும் கருத்துகள் உள்ளது. அதையெல்லாம் பேசுவது மரபு அல்ல. உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநருடன் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரை இந்த அரசு, முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாண்போடு நடத்துகிறது. இதுதான் தமிழ்நாடு அரசின் பண்பு, முதலமைச்சரின் பண்பு.

அதேபோல் ஆளுநர் மனதில் இருப்பதை அவர் கூறினார். எங்கள் மனதில் இருப்பதை நான் கூறுகிறேன். தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெள்ளம், புயல் எல்லாம் ஏற்பட்டது. அதற்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் PM Cares ல் உள்ளது. இந்திய மக்களால் கணக்கெழுத முடியாத, கணக்கு கேட்க முடியாத கணக்கில் இருந்தாவது, ரூ.50,000 கோடியை வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும். சவார்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழர்கள்” என கூறினார் சபாநாயகர் அப்பாவு. 

Tags :
AppavuBudgetGovernorNews7Tamilnews7TamilUpdatesRN Ravispeakerspeechtamilnadu assemblyTN Assembly
Advertisement
Next Article