#Kanchipuram குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித் தேர் பவனி | திரளான பக்தர்கள் தரிசனம்!
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் நடைபெற்ற வெள்ளித் தேர் பவனியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா கோயிலுக்கும், காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு இடையே மத்தியில் காஞ்சிபுரம் குமரகோட்ட முருகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கந்தபுராணம் அரங்கேறிய ஸ்தலம் என பெருமை பெற்றது. திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு நேற்று வள்ளி-- தெய்வானையுடன் வெள்ளி
தேரில் குமரக்கோட்ட முருகன் எழுந்தருளினார்.
இதையும் படியுங்கள் : GoldRate | மீண்டும் எகிறிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
முருகருக்கு மெருன் நிறத்திலான பட்டாடைகள் உடுத்தி கையில் வேலுடனும், வள்ளி --தெய்வானை சாமிகளுக்கு பச்சை நிற பட்டாடைகள் உடுத்தி மல்லி, முல்லை, கனகாம்பரம், சாமந்தி உள்ளிட்ட மலர்களால் கோர்க்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு வெள்ளி ரதத்தில் எழுந்து அருளினார். இதையடுத்து, அந்த வெள்ளி ரதமானது குமரகோட்ட கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வளம் வந்தது. அப்போது பக்தர்கள் அரோகரா அரோகரா என கோஷத்துடன் சாமியை வழிபட்டனர்.வெள்ளி தேர் பவனிக்கு முன்பாக சிவவாத்தியங்கள் ஒலிக்கப்பட்டது. வெள்ளித் தேரில் குமரகோட்ட முருகர் எழுந்தருளி வலம் வந்தது மிகவும் ரம்மியமாக காட்சியளித்தார்.